மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம்

மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

மலேசியாவில் நடந்த ஒரு எதிர்மறையான விஷயத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்றுவது என்பதுதான் இப்பதிவு.

ஒரு நாள் நான் மலேசியாவில் கார் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார் எதிர்பாராதவிதமாக பழுது ஆகிவிட்டது. அப்போது அந்த கார் ஓட்டிய ஓட்டுநர் அந்த காரில் உள்ள ஸ்பீடோமீட்டர் இல் உள்ள எண்ணை எழுதி வைத்துக் கொண்டார். நான் அவரிடம் கேட்டேன் எதற்காக அந்த எண்ணை எழுதி வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார். எங்கள் ஊரில் இதே மாதிரி ஏதாவது வாகனம் பழுதடைந்து விட்டால் அல்லது விபத்து அடைந்தாள் அந்த வண்டி கடைசியாக என்ன ஸ்பீடோமீட்டர்ல் நம்பர் காட்டியது அந்த நம்பரை நாங்கள் பதிவு செய்து வைத்துக் கொள்வோம் அது எங்களுடைய அதிர்ஷ்ட நம்பர். ஏதாவது பொருள் வாங்கினாலோ அல்லது பணம் வாங்கினாலோ அந்த நம்பர் வந்தது என்றால் எங்களுக்கு அதிர்ஷ்டம் வந்ததாக நாங்கள் எண்ணிக் கொள்வோம் என்று கூறினார்.

இது உண்மையா என்று நான் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் என் வாழ்க்கையில் இதன் மூலம் நிறைய அதிர்ஷ்டங்கள் நடந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக அந்த ஓட்டுநரின் நண்பர் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. உடனே அவர் வண்டியில் இருந்த கடைசி நம்பரை மலேசியாவில் நம்பர் கடை என்று ஒன்று உள்ளது அங்கே போய் இவரது வாகனத்தில் உள்ள நம்பரை பதிவு செய்து கொண்டார். அதற்கு அடுத்த நாள் இரவு ஏழு மணிக்கு லக்கி என்று ஒன்று ஆரம்பித்தார்கள் அதில் இவர் நம்பருக்கு விழுந்த அதிர்ஷ்டம் மலேசியாவின் மதிப்பின்படி 50 ஆயிரம் ரூபாய். அதற்கு அப்புறம்தான் புரிந்தது மலேசியாவில் இது பல நாட்களாக நடந்து வருகின்றது என்று.

இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தடைகள் வருகிறது என்றால் அல்லது ஒரு தோல்விகள் வருகின்றது என்றால் இது ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை கொண்டு வருகின்றது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நம்மை சோதிக்க தான் வருகின்றது என்று நினைத்துக் கொண்டு அதற்கு நேர்மறையாக ஒரு பாதையில் நாம் சென்றோம் என்றால் நமக்கு நிச்சயம் அதன் மூலம் ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

முதலில் உங்களுக்கு உள்ள தொழில் பிரச்சனை கடன் பிரச்சனை வாழ்க்கை பிரச்சனை குடும்ப பிரச்சனை எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் சரி. கடவுள் உங்களை சரியான பாதையில் செலுத்துவதற்காக உருவாக்கிய ஒரு சோதனை என்று கூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.

ஆகையால் இனி வரும் காலங்களில் தோற்று விட்டோம் என்று வருந்தாதீர்கள், பிரச்சனைகளைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காகவும் நம்மை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்காக கடவுளால் உருவாக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு நீங்கள் நேர்மறையாக செயல்படுங்கள். அதுவே நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாகவே உங்களை உருவாக்குகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்…..!

Back to blog