அருட்பெருஞ்ஜோதி
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
ஒவ்வொரு வாரமும் கேள்வி-பதில் என்கின்ற பகுதியை பார்த்துக்கொண்டு வருகிறோம். நிறைய பேரு நேரடியாக அலுவலகத்தில் அழைத்து இந்த மாதிரியான கேள்விக்கு நிறைய இருக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் குருஜியை தர சொல்லுங்கள் அல்லது யூடியூப் சேனலில் நிறைய அன்பர்கள் கேள்விகள் கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு ஒவ்வொரு வாரமும் பதில் தந்து கொண்டிருக்கிறோம்.
இந்த வாரக் கேள்வி பதில் என்ன அப்படின்னு பார்ப்போம்.
திருச்சியிலிருந்து அருண்குமார் என்பவர் கேட்டிருக்கிறார் வீட்டில் எத்தனை விளக்கு வைக்க வேண்டும்?
குருஜி: குறைந்தது ஒரு விளக்காவது ஏற்றுங்கள். எவ்வளவு விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். விளக்கு என்பது எதிர்மறைகளை விளக்குவதுதான். ஆதலால் வீட்டில் எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்தால் ஒற்றைப்படை விளக்கு ஏற்றினால் நல்லது அதாவது ஒன்று அல்லது 3 அல்லது 5 இந்த மாதிரியான வரிசையில் நீங்கள் விளக்கேற்றுவது நல்லது. ஆதலால் அருண் குமார் அவர்களே தினமும் உங்கள் வீட்டில் திருவிளக்கு ஏற்றுங்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாகவே திருப்பங்கள் ஏற்படும்.
கிருஷ்ணகிரியில் இருந்து பிரியா என்பவர் இந்த விளக்கில் போடும் திரியை என்ன செய்வது என்று கேட்டிருந்தார்கள்?
குருஜி: விளக்கின் திரியை திரித்து தான் போட வேண்டும். பொதுவாக நாம் ஒரு பஞ்சு திரியை வைத்து விடுகிறோம் அந்த மாதிரி செய்யக்கூடாது. இரண்டு பஞ்சு திரியை எடுத்து திரித்து ரெட்டை திரியாக தான் வைக்கவேண்டும். நிறைய பேர் வீட்டில் திரி நன்றாக இருந்து விடும். நிறையபேர் வீட்டில் திரி நன்றாக எரியாது. ஒழுங்கா எரியாத திரியை அனைத்தையும் எடுத்து ஒரு இடத்தில் போட்டு வைக்க வேண்டும். நிறைய தெறி சேர்ந்த பிறகு அந்த திரி அனைத்தையும் எடுத்து பச்சைக் கற்பூரத்தின் கலக்கி. உங்கள் பூஜை அறையில் மூன்று தடவை திருஷ்டி சுற்றுகிற மாதிரி சுற்றி அந்தத் திரியை வீட்டு வாசலில் வைத்து சாயங்காலம் நேரம் அதாவது இருள் வந்த பிறகு அந்தத் திரியை கொளுத்தி விட வேண்டும். அப்படி செய்யும்போது உங்க பூஜை அறையில் உள்ள எதிர்மறைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறைகள் மற்றும் திருஷ்டி அனைத்தும் விலகும். இதை பாரம்பரியமாக வழிபட்டு வருபவர்கள் தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நீங்களும் செய்யுங்கள். அது எரிந்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டால் இன்னும் நல்லது.
சென்னையில் இருக்கக்கூடிய ஒரு அன்பர் எந்த தினம் கோயிலுக்கு சென்றால் நல்லது என்று கேட்டிருந்தார்?
குருஜி: கோயிலுக்கு போவதற்கு எந்த தினமும் இல்லை தினமும் கோயிலுக்கு போக வேண்டும். அதனால் தான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் ஆலயம் தொழுவது சாலமும் நன்று. ஆமாங்க தினமும் கோயிலுக்கு செல்வது நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் தினமும் கோயிலுக்கு செல்வது நல்லது. இல்லை இன்னும் தெளிவு வேண்டும் என்று கேட்டாள். வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றாள். திங்கட்கிழமை காலை எழுந்து கோயிலுக்கு சென்று விட்டு வேலைக்கோ அல்லது தொழிலுக்கும் செல்வது நல்லது.
சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து குமாரி அவர்கள் வீட்டில் பூஜையில் வைக்கக்கூடிய பூக்களை என்ன செய்வது என்று கேட்டிருந்தார்கள்?
குருஜி: நம்மில் நிறைய பேர் அந்தப் பூக்களை எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறோம். இது தவறான ஒரு விஷயம். இறைவனுக்கு படைத்ததை நீங்கள் எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவது மிக மிக தவறான விஷயம். அந்தப் பூவை எல்லாம் எடுத்து கட்டி வைத்து எங்கு ஓடுகிற தண்ணீர் இருக்கின்றதோ அங்கு தண்ணீரோடு தண்ணீராக கலக்கி விட வேண்டும். அது உங்களுக்கு ஒரு நேர்மறையான ஆற்றல்களை ஏற்படுத்தி தரும். இறைவனுக்குப் படைப்பது குப்பைத்தொட்டியில் போடுவது தவறான செயல் ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே இன்றிலிருந்து அந்தப் பூவை எல்லாம் எடுத்து கோர்த்து ஓடும் தண்ணீரில் கலக்கி விடுங்கள். ஆனால் காகித பையோடு கலக்க வேண்டாம். ஏனென்றால் நல்லது செய்யப்போய் கெட்டது செய்ய வேண்டாம் என்பதற்காகத்தான்.
இதுபோல உங்களுக்கு என்ன கேள்வி இருந்தாலும் சரி ஒவ்வொரு வாரமும் பதில் தருகிறேன் அதுமட்டுமல்லாமல் அந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அக்ஷயம் ஆன்மீக மாத இதழில் அதை பதிவிட்டு நான் பதில் தந்து வருகிறேன். மாத இதழுக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது கீழ் இருக்கக்கூடிய தொலைபேசி எண் இருக்கும் உங்கள் கேள்விகளை பதிவு செய்யலாம்
9976924786
9698999786
வாழ்வே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் நான் தருகிறேன். உங்கள் வாழ்வை ஆனந்தமாக மாற்றிக்கொள்ள. அற்புதங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து நடக்கட்டும். மீண்டும் அடுத்த கேள்வி பதில் சூட்சும ரகசியங்களை பதிவிடுகிறேன்.
அது வரைக்கும் உங்கள் வாழ்வில் நல்லதையே சிந்தியுங்கள்.
வாழ்க பணமுடன்! நன்றிகள் கோடி! ஆனந்தம்!