தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

ஆனந்த வணக்கம். அன்பு நண்பர்களே!

இது நமது தமிழர்களின் இளைஞர்களுக்காக. அவர்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக ஒரு பதிவு. மிக நீண்ட பதிவு தான் ஆனாலும் ஆழ்ந்து படியுங்கள் உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்ற முடியும். உங்கள் தலைமுறையும் உங்களால் மாற்ற முடியும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

இந்தி வியாபாரிகள், தமிழகத்தில் பெருவாரியான வியாபாரத்தை பிடித்துக்கொண்டனர் என்று அவ்வப்போது சிலர் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

Business Motivation in tamil

உண்மைதான்!

கணிசமான எண்ணிக்கையில் வட இந்திய வியாபாரிகள், தமிழகத்தில் சின்ன சின்ன ஊரிலும் கடைகள் போட்டு இருக்கின்றனர்.
மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு 4-ரோடு சந்துகளிலும் மலையாளிகள் பத்து வருடங்களுக்கு முன்பே பேக்கரி போட்டு விட்டனர். தின்பண்டங்களில் இருந்து சொந்த பிராண்ட்கள் கூட வந்துவிட்டது.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் 'சேட்டு பசங்களுக்கு தான் கடை வாடகைக்கு தருவேன்' என்று சொல்வதில்லை. கம்பெனிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும், 'இந்திகாரனுக்கு மட்டும் தான் சப்ளை செய்வேன்' என்று உட்கார்ந்து கொண்டு இருப்பதில்லை.

https://youtu.be/5y15nVDAZ_8

'ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வணிகம் செய்ததாகச் சொல்லப்படும்' இந்த தமிழ் குடி என்னாயிற்று?

கணிசமாக படித்து வேலைக்கு போன பெற்றோர்கள், தங்கள் வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்று ஒரு சூழல் இருப்பதால், வியாபாரம் பண்ணிதான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் இல்லாததால், பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகிவிட்டது.

ஒரு ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதற்கு நம் படிக்கும் கல்விகள் காட்டும் ஆர்வத்தில், 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ்-இன்டர்வியூவில் வேலை பெற்றவர்களை அதன் பின்னர் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக அடையாளம் கண்டு விளம்பரம் படுத்திக்கொள்ளும் கல்லூரி, முன்னாள்-மாணவர்கள் சங்கத்திற்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்று பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணம் ஆகும்வரை உயர்கல்வி கற்பது, பொழுதை ஓட்ட படிக்கப் போவது என்பதெல்லாம் தமிழகத்தில் இப்போது பேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதே இல்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்க கூடாது, எனக்கு நான் தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமையில் நான் இருக்கக்கூடாது என்றெல்லாம் நினைப்பவர்கள் தொழிலில் வெற்றியடைய முடியாது.
ஊரில் யாராவது தொழில் செய்ய ஆரம்பித்தால் பல நபர்களுடைய கதைகளை சொல்லி பயன்படுத்துவது வழக்கம். வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு-காசு போட்டு நாலு-காசு சம்பாதிக்க வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்ட சாதி-பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக் கொள்வது ஒரு காரணம்.
உள்ளூரில் உள்ள ஒரு நபரால், தொடங்கி நடத்த முடியாத ஒரு கடையை எப்படி ஒரு சின்ன சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகிறார் என்று விரிவாக அலசாமல், அவர்களுக்கெல்லாம் ஒற்றுமை இருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறோம்.

எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. 'FRUGAL MANAGEMENT' என்று MBA பட்டதாரிகள் படிப்பார்கள்.
மற்றவர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக கடை திறந்து, மற்றவர்களுக்கு ஒரு மணி நேரம் பின்னதாக கடை மூடுவது, மதிய உணவைக்கூட கல்லாவில் உட்கார்ந்து 15 நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு குறைவான லாபத்தில் நிறையவிற்கும் கலைமுதல் பலவற்றை, அந்தந்த ஊர் மக்களை புரிந்துகொண்டு தொழில் நடத்துகின்றனர்.

Business Motivation by Star Anand Ram

நல்ல வியாபாரிகளுடன் பழகும்பொழுது அவர்களிடம் இருந்து கிடைக்கும் தொழில் அணுகுமுறைகள் விலைமதிப்பற்றது.
கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும் பொழுது வாடிக்கையாளர்கள் வந்தால் என்ன சொல்வீர்கள்? 'சற்றுநேரம் காத்திருங்கள்' என்று சொல்லிவிட்டு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கை கழுவினால், அது அந்த வாடிக்கையாளர்களையும் சேர்த்துக் கை கழுவுதல் என்று அர்த்தம்!
சாப்பாட்டை விட முதலில் வாடிக்கையாளர்களை கவனிப்பது உங்கள் தொழிலுக்கு வெற்றியை கண்டிப்பாக ஏற்படுத்தித்தரும்.

அனுபவரீதியான உண்மை: போட்டிக்கு ஆளில்லாத வரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார்.

'நாலு காசு சம்பாதிக்க தான் கடை போட்டு உட்கார்ந்து இருக்கிறோம்' என்று எளிமையாக எடுத்துக்கொண்டு, மார்வாடி சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
ஒரு வெற்றி கிடைத்தவுடன் மாத கொண்டாட்டம், வெளிநாடு பயணம் என்று செல்பவர்கள் தொழிலில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

இந்தியாவில் தமிழ்நாடும், குஜராத்தும் தான் அதிக பெண்கள் தொழிலதிபர்களை கொண்டுள்ளது. ஏகப்பட்ட இளைஞர்கள், பணிபுரிந்தவாரே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. 'அவ்வாறு இல்லையே' என்று தோன்றினால், நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

'கார்ப்பரேட் எதிர்ப்பு' என்ற பெயரில் சில லெட்டர்பேடு கட்சிகள் இளைஞர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தொழிலை எப்படி தொடங்குவது, எவ்வாறு பதிவிடுவது என்ற ஒரு புரிதலும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்டப்பட்டு தொழில் நடத்தி, அது வெற்றிகரமாக நடக்கும்பொழுது சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் கைவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல், 'பன்னாட்டு மாபியா', 'கார்ப்பரேட் மாபியா' என்று அதை இதை சொல்லி அச்சப்படுத்துவதே இவர்களுக்கு வேலை.

சில தொழில்கள் பண்ணினால் நஷ்டம் வரும். அதை புரிந்து, நீண்ட காலம் தொடர்ந்து பண்ணினால், வெற்றி உண்டாகும்.

நம் இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சனை சோம்பேறித்தனம்.

'ஏதாச்சும் பண்ணனும் பாஸ்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள்.

'வெறும் மந்திரங்களால் மாங்காய் காய்க்காது'.

Inspirational Business Advice by Star Anand Ram

ஆரம்பித்தால் தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல-லட்சங்களில் ஒரு தொழில் ஆரம்பித்து, இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் உங்களின் அறிவுக்கு இணையே இல்லை. புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! பல சுய முன்னேற்ற புத்தகங்களையும், பல சுய முன்னேற்ற பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டே இருப்பதை மட்டும் வைத்துக்கொள்ளாமல், செயல்படுங்கள்.!

இந்த செய்தியையும் படித்துக்கொண்டே இருக்காதீர்கள், செயல்படுங்கள். இளைஞர்களே! 'பணமில்லை, பணம்தான் பெரிய தடை' என்று சொன்னீர்கள் என்றால், பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை (If you don't do it, you won't learn it). நம்ம ஊரில் எவ்வளவு வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது என்பதை வடக்கு இந்தியர்கள் உணர்ந்து கொண்டனர், வெளிநாட்டினர் உணர்ந்து கொண்டனர். நாம்தான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. இதை உணர்ந்து, புரிந்து செயல்படு!

Business Motivation in tamil

உள்ளூரில் உனக்கு இருக்கிறது கோடிகளைக் குவிக்க வழிமுறைகள். 'கோடிகளை முதலில் உன் தெருக்கோடிகளில் ஆரம்பி, அது இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்க வைக்கும்'.

கோடிஸ்வரராக உன்னால் உருவாக முடியும் என்பதை
புரிந்து செயல்படு. புயலென கிளம்பிடு வெற்றி உனக்கு வந்தே தீரும்!

விழித்துக் கொள்வோர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்வார்கள். விழித்துக்கொள் பிழைத்துக்கொள்!
முயற்சியும், பயிற்சியும் சேர்த்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

வாழ்க பணமுடன்!

நன்றிகள் கோடி!

Back to blog