திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி ஆகும்.
நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் நெருங்காது. அதுமட்டுமல்லாமல் நம் எதிரிகள் அல்லது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களால் வைக்கப்படும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்திகளிலிருந்து காக்கும். சிலரின் கெடுபலன் தரக்கூடிய கண் திருஷ்டி அண்டாது. I

துர் சக்திகளும், துர்தேவதைகளும் மந்திரிக்கப்பட்ட கயிற்றுக்கு அருகில் கூட நெருங்க முடியாது என்று கூறுவார்கள். எனவே இதை நாம் கட்டிக் கொண்டிருப்பதால் ஏதோ ஒரு விதத்தில் அது நமக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அல்லது பாதுகாப்பு உணர்வை நம்முள் விதைக்கிறது. எனவே கருப்பு கயிறு கட்டும் பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

எந்த ஒரு கெட்ட சக்தியும் கால் பாதம் வழியாக நம்முள் நுழைகிறது. குறிப்பாக பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை செய்து நடுரோட்டில் போட்டு வைப்பவர்கள், திருஷ்டி கழித்து தெருவில் அப்படியே போடுவார்கள். இதை தெரியாமல் மிதிப்பவர்கள் உடைய கால்கள் வழியாக எந்த விதமான கெட்ட சக்தியும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கால்களில் பொதுவாக கறுப்பு கயிறு கட்டப்படுகிறது. கால்களின் கட்டை விரல் நகத்தில் மை வைத்துக் கொண்டால் துஷ்ட சக்திகள் நுழையாது என்று அக்காலங்களில் கூறுவார்கள். எனவே பாதங்கள் வழியாக நுழையக் கூடிய துஷ்ட சக்திகளை தடுத்து நிறுத்த காலில் கயிறு அணியப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சனி பகவானின் கெடு பலன், பார்வை வேகத்தை இந்த கயிறு கட்டுப்படுத்துவதோடு, குறைக்கிறது

பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்வது நல்லது. அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக் கொள்ளவும். சனிக்கிழமைகளில் இந்த கயிற்றைக் கட்டிக் கொள்வது விசேஷமானது.

இந்த கருப்பு கயிற்றைக் கட்டிக் கொள்வதால் நாம் அறியாமல் நமக்கு விபத்து ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும். உடல் ஆரோக்கிய கோளாறு உள்ளவர்கள் அனுமன் கோயில் வைத்து கட்டிக் கொண்டால் நலம் பெறலாம்.

கயிறை கட்டிக் கொள்ளும் போது ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம், அனுமன், துர்கா தேவியை மனதில் நினைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரிக்கலாம்.

எதிர்மறை சக்திகளிலிருந்து காக்கக் கூடிய இந்த கயிறை பருவமடைந்த பெண்கள் தங்களின் வலது காலில் கட்டிக் கொள்வதால் பயம், தீய சக்திகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கும் ஒரு அரணாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மதங்களை கடந்து இந்த கயிறு பல இடங்களில் மந்திரித்து அதற்கு சக்தி கொடுத்து பக்தர்களுக்கு கொடுப்பது உண்டு.

வாழ்க பணமுடன்!

உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.

பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி

Sri Gubara Guruji
Dr.Star Anand Ram
Sri Anandham Ji

Back to blog