தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம்

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

ஆனந்த வணக்கம் அன்புஅன்பர்களே

வராகி தெய்வம் ராஜராஜேஸ்வரி தெய்வத்தின் படைத்தளபதியாக போர் படை தளபதியாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம் இத் தெய்வத்தை யாரோ ஒருவர் மனதால் நினைக்கின்றார்களோ மனதால் அவர்களின் மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை தீங்குகளும் தடைகளும் காணாமல் போகும் வராகி தேவி அஷ்டலட்சுமி உருவமாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம்.

பஞ்சமியன்று நெய்தீபம் ஏற்றி கீழ்க்கண்ட மந்திரத்தை யாரொருவர் 108 முறை மனதார வராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அற்புதங்கள் நிச்சயமாகவே ஏற்படும் மிக முக்கியமாக பெண்கள்.

பெண்கள் சிறு சிறு தொழில்களை செய்து கொண்டிருப்பார்கள் அத்தொழிலில் பல்வேறு விதமான தடைகளும் இடையூறுகளும் எதிர்மறைகளும் வந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருக்கக்கூடிய சூழல்களில் யாரொருவர் கீழ்க்கண்ட மந்திரத்தை மனதார தொடர்ந்து வழிபட்டு வருகிறார்கள் மிக முக்கியமாக பஞ்சமி திதியன்று நெய்தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை வழிபாடு செய்கிறார்களோ அவர்களின் தொழிலும் அவர்களின் வாழ்விலும் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடைகளும் காணாமல் போகும்.

தொடர்ந்து இந்த வழிபாடுகள் செய்யும்போது நீங்கள் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கக்கூடிய பஞ்சமி தாயான வராகி தேவியை சென்று வழிபட்டு வாருங்கள் அவ்வாறு நீங்கள் வழிபட்டு வர உங்கள் வாழ்வு வளம் பெறும் நலம் பெறும் சகல ஐஸ்வரியங்களும் பெறும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஆத்மார்த்தமாக வழிபட ஆரம்பியுங்கள் அற்புதங்கள் நிச்சயமாகவே ஏற்படும்.

தினமும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும்.

இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹ|
ருந்தே ருந்தினி நமஹ|
ஜம்பே ஜம்பினி நமஹ|
மோஹே மோஹினி நமஹ|
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி
ஜிஹ்வா ஸ்தம்பனம்
குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.

Back to blog