யார் அவன்

யார் அவன்

யார் அவன்

என் தோல்விக்கு காரணம் நான்
என் வெற்றிக்கு காரணம் என் மனைவி
என் அமைதிக்கு காரணம் என் தாய்
என் சுயஒழுக்கத்திற்கு காரணம் என் தந்தை
என் உற்சாகத்திற்கு காரணம் மனம்
என் அறிவிற்கு காரணம் குருமார்கள்
என் ஆனந்தத்திற்கு காரணம் உழைப்பு
என் குதூகலத்திற்கு காரணம் நண்பர்கள்
என் சொல்லுக்கு காரணம் தமிழ்
என் செயலுக்கு காரணம் தன்னம்பிக்கை
என் அமைதிக்கு காரணம் தியானம்
என் தியானத்திற்கு காரணம் சித்தர்கள்
என் விவேகத்திற்கு காரணம் நன்றி மனப்பான்மை
என் வழிபாட்டிற்கு காரணம் என் குல தெய்வம்
என் மனப்பான்மைக்கு காரணம் குபேரர்
என் நம்பிக்கை காரணம் ஆழ்மனம்
என் வார்த்தைக்கு காரணம் நீங்கள்
என் எண்ணங்களுக்கு காரணம் செயல்கள்
என் வாழ்வுக்கு காரணம் பிரபஞ்சமே

நான் நானில்லை எல்லாம் அவனே
அவனின் ஒரு அணு நான்
அவன்றி ஒரு அணுவும் அசையாது
அசைகிறேன் அவனால்
அவனில் நான்
என்னுள் அவன்
அவனே இவன்
இவனே அவன்
இவன் அவன்
அவன் இவன்
யார் அவன் அவனே சிவன்
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

Back to blog