நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்

நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

ஒரு சிட்டுக்குருவி வைத்துக்கொண்டு மலேசியாவில் சில மந்திரங்களை சொல்கிறார்கள். யார் அந்த நபரோ அந்த நபரை வைத்து அந்த நபரையும் அந்த சிட்டுக்குருவியும் இணைக்கும் வகையில் ஒரு மந்திரத்தை சொல்கிறார்கள்.

அதன்பின் அந்த பறவையை சுதந்திர படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்தினால் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன கூற நினைக்கிறோமோ. அதை இந்த உயிரினங்கள் மூலம் சொன்னால் நினைத்தது நிச்சயமாக நடக்கும் என்பது ஐதீகம்.

இதைத்தான் ராமலிங்க அடிகளார் கூறினார் நாம் உயிரினங்களை நேசித்தால் போதும். உங்கள் ஊரில் எந்த வகை பறவையாக இருந்தாலும் சரி அதன்மேல் வேண்டுதல் வைத்து உணவு அளித்து அந்தப் பறவையின் மூலம் பிரபஞ்சத்திற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ. அதைச் சொல்லி உங்கள் காரியத்தில் நீங்கள் வெற்றி அடையுங்கள்.

பொதுவாக செல்வத்தை வைத்து வேண்டுதல் வையுங்கள் என்று நான் அனைவரிடமும் கூறி கொண்டு வருகிறேன். எனக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி"

இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது விட்டு எனக்கு செல்வம் வந்து கொண்டே இருக்கிறது என்று மனதார நினைத்து பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் செல்வம் வந்து சேரும்.

எந்த வகையை பறவையாக இருந்தாலும் சரி அதுக்கு பிடித்த உணவை வைத்து நான் கூறிய அனைத்தையும் செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.

நன்றிகள் கோடி வாழ்க பணமுடன்

Back to blog