ஆறு சக்கரங்களின் வாயிலை அடைவது என்பது தந்திரமாக கையாளக் கூடிய மிகமுக்கியமான பாடங்களில் ஒன்றாகும். மேலும், பெரும்பாலும் அவை செயல்முறை யோகாவால் சிகிச்சையளிக்கும் ஒரு பகுதியாகும்.
பயிற்சி-1 இன் விவரங்களை ஒரு குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பொதுவாக இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்து உலகளாவிய வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதில் ஒரு குடிமகனாக, பின்வரும் 'சஹஸ்ரரா' முறையில் உணரலாம் எனவும் கூறப்படுகிறது:
நுட்பமான நமது ஜீவாத்ம உடல், ஐந்து முக்கிய வாயுக்களின் இருப்பிடம் (பஞ்ச-ஃப்ரானா), அறிவின் மூன்று அம்சங்களான மனம், அகங்காரம் மற்றும் புத்தி மற்றும், உணர்வுகளின் ஐந்து உறுப்புகள் ஆகியவை குலக்குண்டலினி-யுடன் ஒன்றிணைந்துள்ளது.
அபான வாயுவின் ஒரு வடிவமான மூலாதாரத்தில் உள்ள கந்தர்ப்ப அல்லது காம வாயுவுக்கு இடதுபுற சுழற்சி அளிக்கப்பட்டு, மேலும் குண்டாலினி-யைச் சுற்றி நெருப்பூட்டப்படுகிறது.
'ஹம்' எனும் மந்திரமும் மற்றும் நெருப்பூட்டப்பட்ட வெப்பமும், சுருண்ட நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும் குண்டாலினி-யை விழித்துக்கொள்ளச் செய்கிறது.
ஸ்வயம்பு-லிங்கத்தைச் சுற்றி தூங்கிக்கொண்டிருக்கும் அது, தனது மூன்று வட்ட-சுருள்களுடன் மற்றும் ஒரு அரை பிரம்மத்துவாராவின் நுழைவாயிலை மூடிக்கொண்டு, எழுந்து, அந்தக் கதவுக்குள் நுழைந்து மேல்நோக்கி நகர்ந்து, ஜீவத்மாவுடன் ஒன்றுபடும்.
அப்படியாக மேல்நோக்கி நகர்ந்து செல்லும்போது பிரம்மா, சாவித்ரி, தாக்கினிசக்தி, தேவா, பீஜா மற்றும் விரித்தி ஆகியவை குண்டலினியின் உடலில் கலக்கின்றன.
மஹீ மண்டலம் அல்லது பிரித்வீ எனப்படுவது 'லம்' என்ற மந்திரமாக மாறி, குண்டலினியின் உடலில் இணைத்துக் கொள்கின்றன.
குண்டலினி, மூலாதாரத்தை விட்டு வெளியேற விழித்தெழும்போது, தனது பூவை மேல்நோக்கி திறந்த அந்த தாமரை, மீண்டும் மூடிக்கொண்டு கீழ்நோக்கி தொங்குகிறது.
குண்டலினி ஸ்வாதிஸ்தான-சக்கரத்தை அடைந்ததால், அந்த தாமரை வெளியே திறந்து, அதன் மலர்களை மேல்நோக்கி இழுக்கிறது. பின், குண்டலினி-மஹாவிஷ்ணு அங்கு நுழைந்தவுடன், அவ்விடத்தில் நிலைகொண்டிருக்கும் மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, ராகினி சக்தி, தேவா, பால்ராஜ் மற்றும் விரித்தி, வைகுந்ததாமா, கொலகா, தேவா மற்றும் தேவி ஆகியவை குண்டலினியின் உடலில் கலந்துவிடுகின்றன.
'பிருத்வி' அல்லது 'பூமி'-ன் மந்திரம் 'லம்', அபஸ்-ல் கரைக்கப்பட்டுள்ளது. அந்த அபஸ் பின் மந்திரம் 'வம்'-மாக மாற்றப்பட்டு, குண்டலினி-ன் உடலில் தங்கிவிடுகிறது.தேவி மனிப்பூர-சக்கரத்தை அடையும்போது, சக்கரத்தில் உள்ள அனைத்தும் அவளின் உடலில் இணைந்துவிடுகிறது.
வருண மந்திரம் 'வம்' நெருப்பில் கரைக்கப்பட்டு, மந்திரம் 'ரம்'-மாக தேவியின் உடலில் தங்கிவிடுகிறது.
இதை பிரம்மகிரந்தி சக்கரம் அல்லது 'பிரம்மனின் முடிச்சு' என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரத்தை அடையும்போது கணிசமான அளவில் வலி, உடல் கோளாறு மற்றும் நோயை கூட உணரக்கூடும். இதன் காரணமாக, இந்த பயணத்தின் போது, ஒரு அனுபவமிக்க குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. இதனால் வேறுபட்ட யோகா முறைகள், பொருந்தக்கூடிய பலருக்கு பரிந்துரைக்க முடியும். அந்த முறைகளை பயன்படுத்துவதன் மூலம், உயர்ந்த நிலையை நேரடியாக அணுக முடியும்; கீழ் சக்கரத்தை அடையவேண்டிய அவசியமிருக்காது.
குண்டலினி அடுத்ததாக அனாத சக்கரத்தைச் சென்றடைகிறது. அங்கு இருக்கும் அனைத்தும் குண்டலினியுடன் இணைந்து கொள்கிறது. பின், தேஜஸின் மந்திரம் 'ராம்', வாயுவிலிருந்து மறைந்து விடுகிறது. பின் வாயு தன் மந்திரத்தை, மந்திரம் 'யம்'- ஆக மாற்றி குண்டலினி-யின் உடலில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இந்த சக்கரத்தை 'விஷ்ணுகிராந்த்தி' (விஷ்ணு-வின் முடிச்சு) என்றழைக்கப்படுகிறது. பின், குண்டலினி 'வைசுத்த-சக்கரம்' அல்லது 'சரஸ்வதி' அல்லது 'பாரதி'-ன் இருக்கும் இடத்தை நோக்கி ஏறிச்செல்கிறது.
பின், அவ்விடத்தை அடைந்ததும், 'அர்தநாரீஸ்வர சிவா', சாகினி, பதினாறு உயிரெழுத்துக்கள், மந்திரங்கள் மற்றும் பல.. ஆகியவைகள் குண்டலினி-ன் உடலில் கரைந்து விடுகின்றன. வாயுவின் மந்திரம் 'யம்' ஆகாஷத்தில் கரைக்கப்பட்டு பின் தானாகவே மந்திரம் 'ஹம்'-ஆக மாற்றிக்கொண்டு குண்டலினின் உடலில் இணைந்து கொள்கிறது.
லலனா சக்கரத்தை அடைய தேவி முதலில் ஆஜ்னா சக்கரத்தை சென்றடைகிறது. அங்குள்ள பரமசிவன், சித்த காளி, தேவர்கள், குணங்கள் மற்றும் அங்கு காணப்படும் அனைத்தும் அவளால் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. ஆகாஷ-வின் மந்திரம் 'ஹம்', மனச்சக்கரத்துடன் இணைந்து, குண்டலினி-ன் உடலில் இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறது.
ஆஜ்னா சக்கரம், ருத்ர-கிராந்த்தி அல்லது ருத்ர முடிச்சு, சிவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சக்கரத்தை அடைந்த பிறகு, குண்டலினி தன்னுடைய சுய-இயக்கத்தினால் பரம சிவனை சென்றடைகிறது. அப்படியே, இரு-இதழ் தாமரையில் இருந்து மேல்நோக்கி நகர்ந்து செல்வதால், அங்கிருக்கும் நிராலம்பபுரி, பிரணவ, நாதம் மற்றும் பல.. ஆகியவைகளும் அவளுடன் இணைந்து கொள்கிறது. தொடர்ந்து குண்டலினி தன் மேல்நோக்கிய பயணத்தின் போது, மொத்த கூறுகளையும் தன்னுடன் ஈர்க்கத் தொடங்கி, பின் அத்துடன் இருபத்து நான்கு தத்துவத்தையும் ஈர்த்து கொண்டு பரமசிவனுடன் ஒன்றாகிறது. இதை சாத்விக-பஞ்ச-தத்துவத்தினுடைய மைத்துனம் (கூட்டணி) எனப்படுகிறது. இக்கூட்டணியில் இருந்து வழிய தொடங்கும் அமிழ்தம், 'சூத்ரபிராமந்தம்' அல்லது மனித உடலில் பெருக்கெடுக்கிறது. அதன் பிறகு உலகத்தை மறந்த நிலையான 'சாதகா', சொல்லிலடங்காத ஆனந்தத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.
அங்குள்ள 'சாதகா', இடது நாசியில் இருப்பதால், வாயுவின் மந்திரம் 'யம்'-ஐ நினைத்து, 'இதா' மூலமாக மூச்சை இழுத்துக் கொண்டு, பதினாறு முறை மந்திர வழிபாடு செய்யப்படுகிறது.
பின், இரண்டு நாசிகளையும் அடைத்துக்கொண்டு அறுபத்து நான்கு முறை மந்திர வழிபாடு செய்யப்படுகிறது. பின், அடிவயிற்று இடது அறையில் உள்ள கருப்பு 'பாவத்தின் மனிதன்'-ஐ (பாபபுருஷ)-ஐ வற்றுவதாக (காற்றின் மூலமாக) நினைத்துக்கொண்டு, வழது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு, முப்பத்து இரண்டு முறை மந்திர வழிபாடு செய்யப்படுகிறது. பின் சாதகா, மணிப்பூராவிலிருக்கும் சிவப்பு வண்ண மந்திரம் 'ராம்'-ன் மீது தியானம் செய்துகொண்டு, மூச்சை உள் இழுத்து, பதினாறு முறை மந்திர வழிபாடு செய்து, பிறகு அறுபத்து நான்கு வழிபாடு செய்து நாசிகளை மூடிக்கொள்கிறது.
அவ்வழிபாடு செய்யும் போது, 'பாவத்தின் மனிதன்' உடல் எரியப்பட்டு, சாம்பலானதாக (நெருப்பால்) கருதப்படுகிறார். பிறகு, அவன் முப்பத்து இரண்டு மந்திர வழிபாடு செய்தவாறு வலது நாசி வழியாக மூச்சை வெளிவிடுகிறார். பின், வெள்ளை-சந்திர மந்திரம் 'ஹம்'-ன் மீது தியானம் செய்கிறான். அடுத்து, 'இடா' மூலமாக மூச்சை உள் இழுத்து, பதினாறு முறை மந்திர வழிபாடு செய்து, பின் தொடர்ந்து அறுபத்து நான்கு முறை மந்திர வழிபாடு செய்து இரண்டு நாசிகளையும் அடைத்து, பிறகு 'பிங்களா' மூலமாக முப்பத்து இரண்டு வழிபாடு செய்து மூச்சை வெளி விடுகிறான்.
மூச்சை நுகர்தல், உள் நிறுத்துதல், மற்றும் வெளிவிடுதலின் போது, நிலவிலிருந்து விழும் அமிழ்தம் (அனைத்து எழுத்துக்களால் ஆன, மார்க வர்ணா) மூலமாக புதிய விண்ணுலகம் உருவாக்குவதாக உணர வேண்டும். அதேபோல் மந்திரம் 'வம்'- ன் விண்ணுலக உருவாக்கமும் தொடர்ந்து பின் மந்திரம் 'லம்'-மோடு தன்னை நிறைவு படுத்தி, பலப்படுத்திக் கொள்கிறது.
இறுதியாக, மந்திரம் 'சோகம்'-உடன் 'சாதகம்', ஜீவாத்மாவை இருதயத்திற்கு செலுத்துகிறது. அத்துடன், பரமசிவனுடன் ஒன்றிணைந்திருந்த குண்டலினி, அதன் திரும்ப செல்லும் பயணத்தை, வந்த பாதை முறையிலேயே அமைத்துக் கொள்கிறது. அப்படியாக ஒவ்வொரு சக்கரத்தின் வழியாக திரும்பும்போது, அவள் ஈர்த்து சென்ற அனைத்தும், அவளிடமிருந்து பிரிந்து, அந்தந்த சக்கரங்களை சென்றடைகிறது.
அவள் விழிக்கும் முன் இருந்த நிலையில், சக்கரங்களில் இருப்பதாக விவரிக்கப்பட்ட அனைத்தும் இருக்கும்பொழுது, மேற்கொண்ட முறையை பயன்படுத்தி அவள் மீண்டும் 'மூலாதாரத்தை' அடைகிறாள்.
குருவின் வழிகாட்டுதல், ஆஜ்னா சக்கரத்தை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் அதற்கு சிறப்பு வழி ஏதும் குறிப்பிடவில்லை. அந்த சக்கரத்தை அடைந்த பிறகு, 'சாதகா'-வால் பிரம்மஸ்தானம் வரையில் உதவியின்றி சென்றடைய முடியும். 'சிவனின் ஏழாவது வாய்'க்கு கீழோடு குரு, சிஷ்யனின் உறவு நிறுத்தப்பட்டுவிடும். ஏழாம் நிலையை அடைவதற்கான வழிகாட்டுதல் பற்றி குறிப்பிடவில்லை.