விநாயகர் சதுர்த்தி 2021
விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி 2021 – வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். …