கிரகமாலிகா யோகம் 2022
கிரகமாலிகா யோகம் 2022
கிரகமாலிகா யோகம் செல்வ செழிப்பான வாழ்வை ஏற்படுத்தும் சூச்சம வானியல் அற்புதம் சித்தர்கள் வெளிப்படுத்திய ரகசியம்
கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் – ஜூலை 2 – 12
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும்
கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 – ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது.