ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை அன்னதான சேவை

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதம்

நமது ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக

அக்சய பிரசாதம் அன்னதான சேவை
செய்ய புதிய வாகனம் ஏற்பாடுசெய்து உள்ளோம்

கோவை இ 1 சிங்கை காவல் நிலைய ஆய்வாளர் வினோத்குமார் அவர்கள் நமது அன்ன
சேவை வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இனி தொடர்து அன்னசேவை இயலாதவர்களுக்கு எங்களால் முடிந்தவரை கொண்டுசேர்ப்போம்

வாய்ப்பை தந்த பிரபஞ்ச சக்திக்கு குருவுக்கு குலதெய்வத்திற்கு

நன்றிகள் கோடி

ஜெய் ஆனந்தம்

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி இன்று

இறைவனை நாம் வழிபட நினைத்தால் இறைவன் நம்மை அழைத்து ஆசி வழங்குவார்

இன்று வழங்கினார் நன்றிகள் கோடி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.
அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு

ஏன் ஸத்ய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

மற்ற யுகத்தில் அதாவது முந்தைய ஸத்ய த்ரேதா துவாபர யுகத்தில் கஷ்டப்பட்டு விரதமிருந்து பல ஆண்டுகள் நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் பரமாத்மா தோன்றுவார்.

ஆனால் கலியுகத்தில் அப்படி அல்ல.

நாம ஸ்மரணை நாம ஜெபம் ஒன்றே பகவானுக்கு பரம ப்ரீதியை தரும்.

அதுமட்டுமல்ல பொய் பித்தலாட்டம் நயவஞ்சகம் அதிகமாக இருக்கும் கலியுகத்தில் இந்த ஸத்ய நாராயண பூஜை ஒன்றே சகல செளபாக்யத்தையும் தர வல்லது.

பகவானை கெட்டியாக பிடித்து கொண்டால் அவரும் நம்மை கெட்டியாக பிடித்துக் கொள்வார்.

ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த முறை குரு வாரம் அதுவும் திருவோண நட்சத்திரத்தில் வருவது அதி அற்புதமான நாள்.

அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.

ஆமை மோதிரத்தை அணிந்தால் வீட்டை தேடி அதிர்ஷ்டம் வரும்…

இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும்  போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?
கலிலீயோதான்.

அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்பே இந்த ஸ்ரீவராக பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே; அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டை என்று தெரியும் ?

அது தான் மெய் ஞானிகள் நமது சித்தர்களின் ஆன்மிக அறிவியல்

அண்டம் பிண்டம் ஓன்றே

ஆடிப்பூரம் 2022

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

ஆடி அமாவாசை சிறப்பு தரிசனம் தக்ஷிண கால பைரவர் தரிசனம் தர்மபுரி

அதியமான் கோட்டை காலபைரவர்…

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒருமுறை அதியமான் மன்னருக்கு அபூர்வமான நெல்லிக் கனி கிடைத்தது. அந்த நெல்லிக் கனியை உண்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது தெரிந்திருந்தும், அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல், தமிழின்பால் கொண்டிருந்த தனிப் பற்றின் காரணமாக, தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை ஔவை பிராட்டிக்கு தந்து மகிழ்ந்தான்.

ஆடி அமாவாசையின் மகத்துவம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி ஆகும். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய கணுக்கால் பகுதியில் கயிறு Read more…

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள்

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள் :
மந்திரங்கள்

நாம் தெரிந்து கொள்ளப் போவது

27 நக்ஷத்திரங்களின் காயத்ரி :

ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 11 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.