நவ கிரக பரிகார தமிழ் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவை நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்தில்தான் பன்னிரண்டு ராசிகளும் அமைந்திருக்கின்றன. அதனால், பன்னிரண்டு ராசி அன்பர்களுமே இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர்பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ …