Description
Happy Money
செல்வத்தைப் பெருக்கும் பிரபஞ்ச சூத்திரம் ஆதிகாலம் முதல் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெற்றி முறைகளை தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி விஞ்ஞானமும் மெய்ஞானமும் சங்கமிக்கும் ஒரு கையேடு தான் இப்போது உங்கள் கையில் உள்ளது முதலில் செல்வந்தராக உங்களுக்கு வாழ்த்துக்கள்.
செல்வத்தைப் பெருக்குவது என்பது திட்டவட்டமான கழுவி அதை கற்க வேண்டும் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதை பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்ள (உபயோகக் கையேடு) தருவார்கள் ஆனால் பணத்தை எப்படி பெருக்குவது உபயோகிப்பது சேமிப்பது செலவழிப்பது என்பது சொல்லித் தர சரியான ஆசான் களும் இல்லை அதனாலேயே செல்வது என்பது மிகப்பெரிய விஷயம் பணம் படைத்தவர்கள் மட்டுமே மேலும் பணக்காரர் ஆகலாம் விதி இப்படித்தான் நம் தலைவிதி அல்லது பணம் அதிகமாகச் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும் தூக்கம் வராது நேர்மையாக இருக்க முடியாது பாவம் செய்ய வேண்டும் என்று தனக்கு பலவிதமான எதிர்மறையான எண்ணங்களை மனதில் பதித்து பணத்தை விட்டு விலகி நிற்க விரும்புவது நீங்கள்தான்.
பணத்தை பயன்படுத்துவதற்கான மற்றும் பெருக்குவதற்கான இயற்கையான விதிகள் இருக்கின்றன ஒருவேளை நீங்கள் அறியாமல் இருக்கலாம் புவியீர்ப்பு பற்றி விதி இருப்பது போல பணம் பற்றி இயற்கை விதிகள் இருக்கின்றன நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்த இரண்டுமே தொடர்ந்து அமலாகி கொண்டு தான் இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பணத்தை பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை என்றால் பணம் உங்களை விட்டு விலகி நிற்கும்.
பணத்தின் பிரபஞ்ச விதியுடன் நாம் செயல்பட்டால் பணம் நம்மிடையே பெருகும் ஒளிரும் மிளிரும்.
இந்தப் பயிற்சி கையேட்டின் குறிக்கோள் பணத்தின் பிரபஞ்ச விதியை விஞ்ஞானமும் மெய்ஞானமும் சங்கமித்து நம் சித்தர்கள் அருளிய ரகசிய சூத்திரத்தை சாமானியருக்கும் கொண்டு சேர்த்து அவர்களை செல்வந்தர் ஆக்குவதே
பணத்தை ஈர்ப்பதற்கான பயிற்சி கையேடு தான் இந்த புத்தகம் ஏன் எதற்கு பயிற்சி
பயிற்சிகளால் செய்ய இயலாது ஒன்றுமே இல்லை
பயிற்சிகளால் எட்ட முடியாதது எதுவுமே இல்லை
தீய ஒழுக்கங்களை நல்லொழுக்கங்கள் ஆக மாற்ற வல்லமை பயிற்சிகள்.
தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்
மனிதர்களை தேவர்களாக உயர்த்தக்கூடிய இப்பயிற்சிகளே
இப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை படித்தால் மட்டுமே செல்வந்தர் ஆக முடியாது நம்பிக்கையுடன் செயல்படு தொடர்ந்து பயிற்சி செய்துவாருங்கள் எல்லாம் செயல்கூடும் உங்கள் ஆற்றலை உணர வைப்பதற்கான முயற்சிதான் இந்த புத்தகம் உன்னை அறிந்து கொண்டு உலகை வெல்வது என்பதற்கான கையேடு தான் இது சரியான முறையில் பயிற்சி செய்தால் செல்வம் மட்டும் இல்லாமல் பணம் பெயர் புகழ் என அனைத்தையும் அடையலாம்.
சரியான முறையில் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்வத்தைப் பெருக்கும் பிரபஞ்ச ரகசிய பயிற்சியை நீங்கள் செயல்படுத்தினால் உறுதியாக நீங்கள் செல்வந்தர் ஆகலாம் உங்கள் செல்வத்தை பலமடங்காக பெருக்கலாம்.