Description
அக்னி ஹோத்ரம்
மனித வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு பொருள் என்ன என்றால் தீ, சக்கரம், கல்வி அறிவு என்று சொல்லவேண்டும். ஆதியில் தீயை பார்த்து பயந்த மனிதன் அந்த தீயை தானே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று உணர்ந்த பொழுது அதை வைத்து தன்னை கூடிய மிருகங்களிடம் இருந்து காத்துக் கொண்டான் அந்த தீயையே வழிபாட்டிற்கும் பயன்படுத்தினால் அந்த தீயை ஜோதி வழிபாடு, யாக வழிபாடு, தீப வழிபாடு என வழிபட்டு வந்தான்.
அந்த வழிமுறையில் மாபெரும் பிரபஞ்ச வசியம் வழிபாடாக இருந்ததுதான் அக்னிஹோத்ரம் என்ற வழிபாடு இந்த வழிபாடு பல்வேறு வேதமங்களில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் இந்த வழிபாட்டை செய்ய மனிதன் தன் அகத்தையும் உணர்ந்தான் தன் வழிமுறையில் பல ஆயிரம் ஆண்டாக செய்து வந்த உன்னத வழிபாடுதான் அக்னிஹோத்ரம் இந்த வழிபாடு செய்யும் இடத்தில் அறிவியல் ரீதியாக ஆன்மீக ரீதியாக பல்வேறு நேர்மறை ஆற்றல் பெருகுகின்றது. மிக ரகசியமாக இப்பொழுது பல ஆன்மிக சாதகர்கள் பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் நமது அக்ஷயம் டிவைன் சென்டர் அன்பர்களுக்கு இதை பயன்படுத்தி வளம் பெறவே இந்த புத்தகம். பயன்படுத்தி சகல ஐஸ்வரியங்களையும் பெறுங்கள்.