Sale!

ஸ்ரீ சக்ர டாலர் | Shri Chakra Dollar

1,600.00

Category:

ஸ்ரீ சக்ர டாலர்

மன பலம் அதிகரிக்க ஸ்ரீ சக்தி ஆற்றல் முழுமையாக கிடைக்க

தேவி என்பவளே சக்திதான். சக்தி என்பதுதான் உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது.
ஸ்ரீசக்கரம் என்பது தனிப்பெரும் சக்தியுடன் திகழ்கிறது. உக்கிரத்தைத் தணிக்கவும் சாந்த சொரூபத்தை வழங்கும் அற்புதத்தை ஸ்ரீசக்ரம் வழங்குகிறது.

முக்கியமாக, அம்பாளுக்கு உரிய நாட்களிலெல்லாம் அதாவது செவ்வாய் வெள்ளியாகட்டும், அம்பாளுக்கு உரிய முக்கிய தினங்களோ பண்டிகைகளோ ஆகட்டும்… இந்த நாட்களில், காலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் அமர்ந்து, அம்பாளை உபாஸிக்க வேண்டும்.
அப்போது,
பிந்து த்ரிகோண வஸுகோண தசாரயுக்ம மன்வச்ர நாகதல சம்யுத ஷோடசாரம் வ்ருத்தத்ரயம் ச தரணி சதன த்ரயம் ச ஸ்ரீசக்ரமேதத் உதிதம் பரதேவ தாயா;
அதாவது, தேவியானவள், ஸ்ரீசக்ரத்தின் நடுவே பிந்துவாக வீற்றிருக்கிறாள். சக்கரத்தைச் சுற்றி ஒன்பது தேவதைகள் உண்டு. ஆவரண தேவதைகள் என்று பெயர். இவர்களில் ஒன்பதாவது தேவதையான லோகமாதா பரமேஸ்வரி தேவி என்பவள், உலகநாயகியாத் திகழ்பவள் சக்கரதேவியாகத் திகழ்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

ஸ்ரீசக்ரத்தை நினைத்துக் கொண்டு மனதார எவரொருவர் பூஜை செய்தாலும் , தேகத்தில் பலம் கூடும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். எடுக்கின்ற காரியங்கள் அனைத்திலும் வீரியம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகத்துடன் எப்போதும் செயல்படலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஸ்ரீசக்ரம் என்பது அம்பிகைக்கு உரியது. இறை வழிபாட்டில் தனித்துவமும் மகத்துவமும் நிறைந்தது. அதனால்தான், ஸ்ரீசக்கரத்துக்கான ஸ்லோகமும் வகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. தினமும் 11 முறை சொல்லி வழிபடலாம். காலையும் மாலையும் சொல்லி வழிபடலாம்.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள்.
மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை அவற்றை காணலாம்.

ஸ்ரீசக்ர ஸ்லோகம் சொல்லி, அம்பாளை வழிபட்டு வந்தால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். எதிரிகள் அனைவரும் பின்வாங்கி பதுங்குவார்கள். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும். மனோதிடம் பெருகும். மனக்கிலேசம் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஸ்ரீ சக்ர டாலர் | Shri Chakra Dollar
1,600.00
Scroll to Top