நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும் பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம்.

அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

உத்திர நட்சத்திர சிறப்புகள்..!  மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு. அதில் உத்திரம் நட்சத்திரமும் உண்டு.

உத்திரம் என்றால் வீட்டை தாங்கி கொள்ளும் மேற்கூரை. பொதுவாக உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வீட்டை இப்படி மேல் தளம் போல தாங்கி கொள்வார்கள். குடும்ப பொறுப்புகளை தன் தலையில் தாங்கும் நபராக உத்திர நட்சத்திரக்காரர்கள் வாழ்வார்கள்.

இந்த நட்சத்திரம் மகாலட்சுமிக்கு உரியதும் கூட. உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி என்றால் சூரிய பகவான் தான். சூரியன் இயங்குவதை பொறுத்துயான் தமிழ் மாதங்கள் அமையும். 

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாளில்தான் ஐயப்ப சுவாமியின் மணிகண்ட அவதாரம் நிகழ்ந்தது என விவரிக்கிறது புராணம். இந்த நாளில் ஐயப்பனுக்கு சபரிமலை முதலான க்ஷேத்திரங்களிலும் தமிழகத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறும்.

ஒரு நபரின் ஜாதகத்தில் மன உறுதி, தைரியம், தந்தை உறவு நன்றாக அமைய, தொழில், உத்தியோகம் சிறக்க, அரசு சார்ந்த காரியங்கள் நல்லபடியாக நடக்க சூரிய பகவான் தான் காரணமாக இருப்பார்.

இப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு உரிய உத்திர நட்சத்திரமும், சூரிய பகவான் தன் 1 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யும் கடைசி மாதமான பங்குனியும் இணைந்து வரும் நாள் ரொம்ப சிறப்பானது.

இந்த நாளில் முருகனை வழிபாடு செய்தால் அரசு சார்ந்த காரியங்கள் எல்லாம் சுபமாக முடியும். தலைமை பொறுப்புக்கு சூரிய பகவான் தான் காரணம் என்பதனால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பங்குனி உத்திர நாளில் முருகனுக்கு விரதமிருந்து நல்ல பலனை அனுபவியுங்கள். 

தெய்வநிலையை அடைய உதவும் விரதம்:

எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

இப்படி பல சிறப்புகள் பெற்ற பங்குனி உத்திர விரத்தை நாமும் கடைபிடிப்போம். இறைவனின் அருளில் என்றும் திளைத்திருப்போம்.

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.

நாளை முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

அதனால் மனம் செம்மை அடையும். அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.

சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.

அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.

துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு, படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்கவேண்டும்.

முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள். சுபம். நன்றி நன்றி நன்றி 🌞

வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.Star Anand ram

பணவளக்கலை

Akshyum Divine Center

www.drstaranandram.com