திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி 2023

ஜெய் ஆனந்தம்

சித்தன் ராத்திரி 2023 முன்னிட்டு

அனுமதி இலவசம் அனைவரும் வாருங்கள்

சித்தர்களின் வாலை பூஜை

சிவ கைலாய வாத்தியம்

சிவ திருநடனம்

சிவன் பார்வதி பச்சக்காளி பவழகாளி

பூஜையின் பயன்கள்

அருட்பெரும்ஜோதி

பேரருள் அன்பர்களுக்கு,

வணக்கம். தமிழ்ச்சித்தர்களின் தலைமைப் பெருந்தகை சிவபெருமான். அவருக்கான விழாக்களில் மிகச்சிறப்பானது மகாசிவராத்திரி. வாழ்வின் சகலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் சிறப்புக்குரிய நாள்.

சமய வரலாற்றிலேயே முதன் முறையாக.. 1008 ஆன்மீகக் குடும்பங்களுடன் இணைந்து 18 மணி நேர இடைவிடாத கொண்டாட்டமான அமைய இருக்கிறது சித்தன் ராத்திரி. கோடானுகோடிச் சித்தர்களின் தலைவனான சிவனை மரபு வழியில் வழிபடும் அரிய நிகழ்வாகவும் சித்தன் ராத்திரி இருக்கிறது. இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு சித்தர்களின் தலைவனாகிய சிவனின் பரிபூரண அருள் கிட்டும்.

மகத்துவம் வாய்ந்த திருநாள் மகாசிவராத்திரி ஆகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், கேதார விரதம் போன்ற சிவ விரதங்கள் எட்டில்(கந்தபுராணத்தின் உபதேச காண்டம்) சிவனுக்குச் சிறப்பான விரதமாக மகாசிவராத்திரி திகழ்கின்றது.

சிவன் என்பதன் பொருள் மங்ளம் தருபவன் என்றும் செம்மை தருபவன் என்றும் கூறப்படும். மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14 ஆவது சதுர்த்தசியன்று வருவது மகாசிவராத்திரியாகும். சிவ விரதங்களில் முதன்மையானது மகாசிவராத்திரி ஆகும்.

மகாசிவராத்திரியின் போது சித்தர்கள் கொண்டாடிய சிவனை வணங்குவது என்பதுதானே பொருத்தமாக இருக்கும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் எனும் கருத்தையும் பல சான்றோர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். சித்தன் போக்கு சிவன் போக்கு எனும் பண்டைத் தமிழரின் சொலவடையும் சிவனுக்கும், சித்தர்களுக்குமான உறவை உறுதிப்படுத்தும். அந்த அடிப்படையில் அட்சயம் ஒருங்கிணைக்கும் ஆன்மீக நிகழ்வே சித்தன் ராத்திரி.

மகாசிவராத்திரி கற்பம் எனும் பழைய ஆன்மீக நூல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சித்தன் ராத்திரி நிகழ்வுகளை இறுதி செய்திருக்கிறோம். அந்நூலை எங்களிடம் வழங்கி, சித்தன் ராத்திரி நிகழ்வுக்கு எம்மை ஆற்றுப்படுத்தியவர் ஐயா பாலாஜி சிவம்(ஈரோடு ஆதீனம்) அவர்கள். கொங்கேழ் சிவத்தலங்களில் முதன்மையான திருநணா(பவானி) கோவிலின் தலைமைக் குருக்களான அவரின் ஆசிர்வாதங்களோடுதான் சித்தன் ராத்திரி நிகழ்வுக்கான பணிகளைத் துவங்கி இருக்கிறோம்.

பதினெட்டு மணி நேர நிகழ்வுகளைக் குறித்த சிறு அறிமுகத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவராத்திரி நாளான பிப்ரவரி 18 அன்று மாலை 06.00 மணிக்கு சித்தன் ராத்திரி நிகழ்வுகள் முறைப்படி துவங்கும். முதல் நிகழ்வாய், சித்தர்களின் குலதெய்வம் வாலை அம்மனை வழிபடும் சிறப்பான நிகழ்வு. தமிழ்த் திருமுறைகளாலும், தமிழ்மரபுச் சடங்குகளாலும் வாலை அம்மன் வழிபாட்டை சிவநெறிச்சான்றோர்கள் ஒருங்கிணைக்க இருக்கின்றனர். மாலை 08.00 மணி வரை வாலை அம்மன் வழிபாட்டோடு தமிழ் வேள்வியும் நடைபெற இருக்கிறது.

மாலை 6 மணிக்கு மிகச்சரியாக பாரம்பரிய சிவக்கலைஞர்களின் உடுக்கை இசை ஒலிக்கத் துவங்கி விடும். சித்தன் ராத்திரியின் முறைப்படியான கொண்டாட்டங்களை அறிவிக்கும் ஓசை அது.

மகாசிவராத்திரி கற்பம் நூலில் சிவராத்திரி இரவை நான்கு யாமங்களாகப் பகுத்து, நான்கு வடிவங்களில் சிவனை வழிபடும் முறைகளையும் தெளிவாய்க் கொடுத்திருக்கின்றனர். அவ்வடிப்படையிலேயே நாமும் சித்தன் ராத்திரியைக் கொண்டாடுவதாய் இருக்கிறோம்.

மாலை மிகச்சரியாக 06.00 மணிக்கு முதல் யாம வழிபாடுகள் துவங்கும். முதல் யாம வழிபாட்டுக்கான சிவ வடிவம் சோமாஸ்கந்தர். அவருக்கான வழிபாடு அந்நேரத்துக்குரிய இசை, நடனங்களோடு சிறப்பாக மேற்கொள்ளப்படும். முதல் யாம வழிபாட்டில் ரிக் வேதத்தின் முக்கியமான சூத்திரங்களும், சிவபுராணமும் சிவநெறிச்சான்றோர்களால் ஓதப்படும்.

இரவு சரியாக 09.00 மணிக்கு இரண்டாம் யாம வழிபாடுகள் துவங்கும். இரண்டாம் யாம வழிபாட்டுக்கான சிவ வடிவம் தென்முகச்சிவன் எனும் தட்சிணாமூர்த்தி. அவருக்கான வழிபாடு அந்நேரத்துக்குரிய இசை, நடனங்களோடு சிறப்பாக மேற்கொள்ளப்படும். இரண்டாம் யாம வழிபாட்டில் யஜூர் வேதத்தின் முதன்மையான சூத்திரங்களும், கீர்த்தித் திருவகவலும் சிவநெறிச்சான்றோர்களால் ஓதப்படும்.

நள்ளிரவு சரியாக 11.36-இல் இருந்து 12.24 வரையிலான காலகட்டமே சித்தன் ராத்திரியின் உச்சகட்டப் பொழுது. கயிலாய வாத்தியக் கருவிகள் முழங்க, ஆகாயத்தலமான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராசப் பெருமானுக்கான வழிபாடு சிவநெறிச்சான்றோர்களால் மேற்கொள்ளப்படும்.

நள்ளிரவு சரியாக 12.30 மணிக்கு மூன்றாம் யாம வழிபாடுகள் துவங்கும். மூன்றாம் யாம வழிபாட்டுக்கான சிவ வடிவம் லிங்கோத்பவர். அவருக்கான வழிபாடு அந்நேரத்துக்குரிய இசை, நடனங்களோடு சிறப்பாக மேற்கொள்ளப்படும். மூன்றாம் யாம வழிபாட்டில் சாம வேதத்தின் முதன்மையான சூத்திரங்களும், திருவாசகத்தின் திருவண்டப் பகுதியும் சிவநெறிச்சான்றோர்களால் ஓதப்படும்.

அதிகாலை சரியாக 03.00 மணிக்கு நான்காம் யாம வழிபாடுகள் துவங்கும்.

நான்காம் யாம வழிபாட்டுக்கான சிவ வடிவம் சந்திரசேகரர். அவருக்கான வழிபாடு அந்நேரத்துக்குரிய இசை, நடனங்களோடு சிறப்பாக மேற்கொள்ளப்படும். நான்காம் யாம வழிபாட்டில் அதர்வண வேதத்தின் முதன்மையான சூத்திரங்களும், திருவாசகத்தின் போற்றித் திருவகவலும் சிவநெறிச்சான்றோர்களால் ஓதப்படும்.

புலர்காலை சரியாக 06.00 மணிக்கு புல்லாங்குழல் இசை ஒலிக்கத் துவங்கும். சித்தன் ராத்திரி நிகழ்வுகள் நிறைவடையப் போவதை அறிவிக்கும் இசை அது.

சித்தன் ராத்திரியில் பங்கு கொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும் தகுதி வாய்ந்த சிவாச்சாரியர்கள் வழியாக சிவதீட்சையும் வழங்கப்பட உள்ளது. வாழ்வின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் சிறப்புக்குரிய நாளில் சிவதீட்சை பெறுதல் கிடைத்தற்கரிய பேறு.

வாழ்வில் சகல நலங்களையும் வேண்டுபவர்கள் சிவராத்திரி அன்று சிவனை வழிபாட்டால் போதும். தனிப்பட்டு சிவனை வழிபடுவதைக் காட்டிலும், கூட்டு வழிபாடு அதிகப்படியான பலன்களைத் தரக்கூடியது. கூட்டு வழிபாட்டை முதன்மைப்படுத்தும் நோக்கில் சிவராத்திரியை நாங்கள் சித்தன் ராத்திரியாகக் கொண்டாடுவதாய் இருக்கிறோம். எங்களோடு இணைந்து சித்தன் ராத்திரியைக் கொண்டாட உங்களையும் அழைக்கிறோம்.

🌟சித்தர்களின் வாலை பூஜை

ஸ்ரீ சைலபுரி ஆதினம்
Dr.கோவிந்தாராஜா சாஸ்திரிகள்


🌟சிவ கைலாய வாத்தியம்

தில்லை கைலாசநாத சிவ இசைக்குழு

🌟சிவ திருநடனம்

மா.சந்தோஷ் குமார்..ஸ்டார் விஜய், மற்றும் ஜீ தமிழ், புகழ்… .ஸ்ரீ உதயம் நாட்டியாலயா – பாண்டி

🌟சிவன் பார்வதி பச்சக்காளி பவழகாளி

கருப்பசாமி நாட்டுப்புற பாடல் ஆரா குழு சேலம்

🌟சிவ ஜோதி தியானம்

சாது ஜானகிராம் வள்ளலார் மிஷன்

வாருங்கள், வாழ்வின் சகலவிதமான துன்பங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கும் சிவனின் பாதங்களைச் சரணடைவோம்.

சிவனருளில் மகிழும்,

உங்கள்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.ஸ்டார் ஆனந்த்ராம்

ஸ்ரீ குபேர பீடம்

மேலும் விபரங்களுக்கு

786 886 8899

நிகழ்வில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படவுள்ளது அன்னதானதீர்க்கனான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

Scroll to Top