அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா?

வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள்

பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு பெரிதும் இருக்கும். இந்த உலகமே பணத்தில்தான் இயங்குது ஆனால் பணத்தை பற்றி பேசினால் இவர் பணத்தாசை பிடித்தவர் என்று கூறுகின்றோம். பணம் என்பது தவறு கிடையாது பணம் என்பது ஒரு தேவை. நீ ஏழையாக பிறந்தவனுக்கு 10 ரூபாய் தேவைப்படுகிறது ஒரு பணக்காரனுக்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த பூமியில் பிறந்து விட்டோம் உன் வாழ்க்கை முன்னோக்கி நகர்த்த பணம் அவசியமானது. 500 வருடத்திற்கு முன்பு விருப்பமாக்கு முறையை இப்போது இருக்கக்கூடிய நாகரீக வாழ்க்கைக்கு பணம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. நான் பிரச்சினைகளை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணத்தைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் ஒரு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இந்த பணம் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. இப்போது Cash Less முறையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பணம் என்றால் நாம் உழைத்ததை ஒரு இடத்தில் வைத்துவிட்டு நமக்கு தேவை இருக்கும்போது அதை எடுத்து பயன்படுத்துவதை பணம்.

என்னுடைய துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் என்னுடைய இன்பத்தை பெருக்கிக் கொள்ளவும் செல்வம் தேவைப்படுகிறது. என்னிடம் நிறைய செல்வம் இருந்தாலும் என்னுடைய வயிற்றுப் பசியை ஒருபோதும் அந்த செல்வம் நிரம்பாது. இந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவு வாங்கிக் கொண்டால் மட்டுமே என்னுடைய பசி தீரும். அதுபோல ஒரு செல்வந்தர் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் செல்வத்தைப் பெருக்கினால் என்றால் எந்த விதத்திலும் தவறு இல்லை.

நான் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு போதிய பணம் கிடைக்கவே மாட்டேங்குது. ஆனால் ஏமாற்றுபவர்கள் கெட்டவர்களுக்கு பணம் அதிகமாக கிடைக்கிறது எப்படி. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணக்காரனுக்கும் தேவை உள்ளது அவனுக்கும் பிரச்சனை உள்ளது. பணம் நிறையாக வைத்திருப்பவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் நான் சொல்வேன். நான் ஏழை கூட இருந்து இருக்கிறேன் நடுத்தர மக்களுடன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறேன் பணக்காரர்களுடன் பழகி இருக்கின்றேன். கார் பங்களா வைத்திருந்தார் சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நம்மளுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு நம்மிடம் பணம் இருந்தாலே நமக்கு சந்தோஷம் நிச்சயம் கிடைக்கும்.

ஒரே விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இந்த உலகத்தில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை நிச்சயமாக இருக்கின்றது. உங்களுக்கு இந்த உலகில் உதவி செய்ய நிறைய நபர்கள் உள்ளனர் இதில் ஏதும் சந்தேகம் இல்லை. அதாவது உங்களுக்கு கொடுப்பதற்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதற்கு முதலில் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் இதுதான் உலக நியதி.

உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள் உங்களை சுற்றியுள்ள அத்தனை நபர்களுக்கு உதவி செய்துள்ளீர்கள் என்று பார்த்தால் மிக குறைவுதான். நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் ஓரறிவு படைத்த மரங்கள் தினமும் விலை கிடைக்கின்றது காய்கறிகள் கிடைக்கின்றன நிழல் கூறுகின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு கொடுத்து உதவி செய்கின்றான். இயற்கை உங்களுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்க தயாராக இருக்கின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கூறுகின்றார் இவை அனைத்திற்கும் ஜீவகாருண்யமே ஒரே வழி. அதாவது பசி தவிர்த்தல் தினமும் ஒரு நபருக்கு ஆவது அவரது பசியைப் போக்கினால் கோடி நன்மைகள் என்று கூறுகின்றார். தினமும் காலையில் உங்கள் வீட்டில் அருகில அல்லது உங்கள் தெருமுனையில் அருகில இருக்கக்கூடிய அல்லது வசிக்கக்கூடிய ஏழைகளுக்கு வயதானவர்களுக்கு அல்லது பிச்சைக்காரர்களுக்கு தினமும் அவரது பசியைப் போக்கினால் கோடி நன்மைகள் பெறுவோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று சொல்லுவார்.

அவ்வாறு நீங்கள் உணவு கொடுக்கும் போது அவர் மனதார வாழ்த்துவார்கள் அந்த வாழ்த்து தான் உங்களது கர்மவினைகளை போக்கக்கூடியது மந்திரம். இந்த தர்மத்தை நீங்கள் செய்து வந்தாலே உங்களுக்கு பாவங்கள் அகலும் நீங்கள் கேட்டது கிடைக்கும்.

உங்களால் முடிந்தவரை நீங்களும் ஒழுக்கமாக இருந்து உங்களை சுற்றி உள்ள அனைவரையும் ஒழுக்கமாக மாற்றினால் போதும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் தினமும் பசி தவிர்த்த தலை விரதமாக கொண்டு செல்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வம் பெருகும். ஆரம்பத்தில் கொஞ்சம் தடை ஏற்படலாம் அதை பொருட்படுத்தாமல் உங்கள் விரதத்தை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் அந்தக் கடவுள் உங்களுக்கு அனைத்தையும் தருவார். இது உண்மை சத்தியம்.

நீங்களும் நன்றாக இருந்து மற்றவர்களின் நன்றாக பார்த்துக் கொண்டீர்கள் என்றால் அந்தக் கடவுள் உங்களுக்கு தான் முதலில் அனைத்தையும் செய்வார் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்வு தினமும் இந்த அருட்பெரும் சேவையை செய்யுங்கள்

நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!

வாழ்க ஆனந்தமாக வாழ்க பணமுடன்!!!