இன்று விடுமுறை ஏன் தெரிந்துகொள்ளுங்கள்

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.

வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் ஆகியவற்றை துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார். அன்பையும் அகிம்சையையும் போதித்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக துறவிகளில் மகாவீரரும் ஒருவர்.

நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.

  • எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருத்தல், உண்மையை மட்டுமே பேசுதல், திருடாமை, பாலுணர்வு கொள்ளாமை, செல்வங்கள் மீது பற்று கொள்ளா இருப்பது ஆகிய ஐந்தும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாகும்.
  • ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓம் ஆத்மா உண்டு. அது தனது நல்ல அல்லது தீய செயல்களின் விளைவாக கர்மா என்னும் விவைப்பயனை சேர்த்துக் கொள்கின்றன. கர்மாவின் பயனாக மாயையில் சிக்கி மேலும் துன்பப்படுகின்றன.
  • அந்த துன்பங்களில் இருந்து விடுபட சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகிய மூன்றும் தேவை. இந்த மூன்றிற்கும் திரிரத்தினங்கள் என்று பெயர்.

தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.

  • தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
  • மனிதர்களிடத்திலும், பொருள்களில் இடத்திலும் மற்ற உடைகளின் மீதும் பற்றில்லாமல் இருத்தல்.
  • ஆன்மீக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
  • கல், மண், உலோகம் போன்றவற்றிற்கும் உயிர் உண்டு. தண்ணீரை காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறுந்துவிடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும் போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்துவிடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும்.

வாழுங்கள், பிறரையும் வாழ விடுங்கள்; உயிர் அனைத்து உயிர்களுக்கும் சமமானது.

  • சுற்றுச்சூழல் என்பது அனைவருக்குமானது. உங்கள் ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு அனைத்து உயிர்களுக்கும் சமமான உரிமை உள்ளது.
  • யாருடைய வாழ்வாதாரத்தையும் பறிக்காதீர்கள். அது மிகப் பெரிய பாவம்.
  • அனைவரும் எனது நண்பர்கள். எனக்கு எதிரகள் என எவரும் கிடையாது என எண்ணம் கொள்ளுங்கள்.

இதுபோல் நமது தமிழ் முன்னோர்கள் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் கோடிநபர்கள் உள்ளார்கள்

அவர்கள் பிறந்தநாளுக்கும் விடுமுறை விடலாம்

அல்லது அந்த நாளை நினைவுகூர்ந்து மக்களுக்கு நல்ல விஷயங்களை ஊடகம் மூலம் பகிர்ந்து விழிப்புணர்வு தரலாம்

குருவே சரணம் குருவே துணை

சித்தர்கள் தெய்வ திருவடி சரணம்

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram

Akshyum Divine Center