காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

கணவர் நலமுடன் இருக்க வேண்டும், தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் நினைப்பதுடன். தீர்க்க சுமங்கலி வரம் பெற பல விரதங்களை மேற்கொண்டாலும், அவற்றுள் முதன்மையாக போற்றப்படுவது காரடையான் நோன்பு ஆகும். யமனிடம் போராடி தனது கணவனின் உயிரை சாவித்ரி மீட்டு வந்த நாளையே காரடையான் நோன்பாக (karadaiyan nombu) நாம் கொண்டாடுகிறோம்.

காரடையான் நோன்பு என்பது காமாட்சி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு வழிபடப்படுவதாகும். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இந்த விரதம் மேற்கொள்வதால் காமாட்சி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் இருக்கும் விரதம் காரடையான் நோன்பு. காரடையான் நோன்பு, சாவித்திரி விரதம், கெளரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு என பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் மேற்கொள்ளும் விரதங்களில் ஒன்று காரடையான் நோன்பு.

காரடையான் நோன்பு உருவான கதை :

காரடையான் நோன்பு என்றதும் அனைவருக்கும் சத்யவான், சாவித்ரி கதை தான் நினைவிற்கு வரும். இளவரசியான சாவித்ரி, அண்டை தேச இளவரசனான சத்யவானை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். இவர்கள் திருமணம் நடைபெற்ற சில காலத்திலேயே சத்யவானின் தாய், தந்தைக்கு கண் பார்வை போய் விடுகிறது. அவர்களின் தேசமும் கையை விட்டு போய் விடுகிறது. காட்டில் தனது கணவருடன் வசிக்கும் சாவித்ரிக்கு, தனது கணவர் சத்யவான் வெகு விரைவில் உயிரிழக்க போகிறான் என்ற விபரம் தெரிகிறது.

இதனால் லோக மாதாவான காமாட்சி அம்மனை நினைத்து சாவித்ரி விரதம் இருக்க துவங்குகிறாள். காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு நைவேத்தியம் தயாரித்து படைத்து, பூஜை செய்து வருகிறாள். சத்யவான் உயிரிழக்கும் நாளும் வருகிறது. அன்றும் சாவித்திரி பூஜை செய்கிறாள். யம தர்மராஜா வந்து சத்யவானின் உயிரை எடுத்துச் செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தி, தனது கணவரின் உயிரை திருப்பித் தர யமனிடம் மன்றாடுகிறாள். ஒரு சாதாரண மானிட பெண்ணின் கண்ணுக்கு தான் வருவது எப்படி தெரியும் ? இவள் தெய்வசக்தி படைத்த பெண்ணாக தான் இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு பதிலளிக்க துவங்குகிறார் யமன்.

இந்த பேச்சுவார்த்தை, வாக்குவாதமாக மாறுகிறது. யம தர்மன் யமலோகம் நோக்கி செல்கிறாள். சாவித்ரியும் பின்னாலேயே செல்கிறாள். ஒரு பெண்ணால் தனது பூத உடலுடன் எப்படி யமலோகம் வரை வர முடியும் என யமனுக்கு தாங்க முடியாத ஆச்சரியம். இருந்தாலும் தான் எடுத்த உயிரை ஒரு போதும் திருப்பி தர மாட்டேன் என உறுதியாக சொல்கிறார். சாவித்ரியும் விடுவதாக இல்லை. இறுதியாக யம லோக வாசலுக்கே சென்ற யமன், "பெண்ணே! இதற்கு மேல் நீ வர முடியாது. திரும்பிச் செல்" என்கிறார். "கணவரின் உயிரை திருப்பி தர வேண்டும் என்பதை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்கிறார் யமன்.

அதற்கு சாவித்ரி, " சுவாமி! நான் பதிவிரதை. அதனால் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும். எனது மாமனார், மாமியாருக்கு இழந்த கண் பார்வை வேண்டும். இழந்த ராஜ்ஜியம்" என பல வரங்களை கேட்கிறாள். யமனும் அனைத்து வரங்களையும் தருகிறேன் என கூறி விட்டு, யமலோகத்திற்குள் செல்ல போகும் சமயத்தில் மீண்டும் சாவித்ரி தடுக்கிறாள். "நீ கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்து விட்டேன். இன்னும் ஏன் என்னை தடுக்கிறாய்?" என கேட்கிறார் யமன். அதற்கு சாவித்ரி, "நான் கேட்ட வரத்தில் பாதியை தானே தந்தீர்கள் மீதியை தரவில்லையே. யம தர்மராஜாவான தாங்களே தர்மம் தவறலாமா? கொடுத்த வாக்கை மீறலாமா?" என கேட்கிறாள்.

அப்போது தான் யமனுக்கு யோசனை வருகிறது. தான் பதிவிரதை அதனால் தனக்கு குழந்தை வேண்டும் என சாவித்ரி கேட்டது. கணவரின் உயிரை மீட்பதற்காக தந்திரமாக தன்னிடம் வரத்தை பெற்ற சாவித்ரியின் மதி நுட்பத்தையும், கணவர் மீது அவள் கொண்ட தீராத பக்தியையும் வியந்து சத்யவானின் உயிரை திரும்ப கொடுக்கிறார் யமன். இப்படி யமனுடன் போராடி தனது கணவரின் உயிரை சாவித்ரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக நாம் கொண்டாடுகிறோம்.

மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நாளிலேயே காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023 ம் ஆண்டில் மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை காரடையான் நோன்பு வருகிறது. இந்த நாளில் காலை 06.29 முதல் 06.47 வரை பூஜை மேற்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?

பெண்கள் அனைவரும் கண்டிப்பாக இருக்க வேண்டிய விரதம் இது.

திருமணமான சுமங்கலி பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்பதற்காகவும் காரடையான் நோன்பு இருப்பது வழக்கம்.

காலையில் எழுந்து நீராடி, வீட்டில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி வழிபட வேண்டும்.

* காலை முதல் உபவாசமாக விரதம் இருப்பது சிறப்பு.

* அம்பாள் படத்திற்கு முன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபட வேண்டும். காமாட்சி விருத்தம் பாடி வழிபட வேண்டும்.

* மஞ்சள் சரடியில் இரண்டு மல்லிகை பூ அல்லது ஏதாவது ஒரு பூ எடுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.

* அதை சுவாமி படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். அந்த கயிற்றை கணவரிடம் ஆசீர்வாதம் பெற்று, கணவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

* கணவர் வெளியூர் சென்றிருந்தாலோ அல்லது திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, கழுத்திலோ அல்லது கையிலோ கட்டிக் கொள்ளலாம்.

* இந்த நாளில் தாலி சரடும் மாற்றிக் கொள்ளலாம்.

* நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் கட்டிக் கொள்ளலாம் அல்லது 3 நாட்கள் கழித்து கழற்றி விடலாம்.

நைவேத்தியமாக கார அடை, இனிப்பு அடை செய்து படைக்கலாம். அதோடு உருகாத நிலையில் இருக்கும் வெண்ணைய் ஆகியவற்றை அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம் :

உருகாத வெண்ணையும் ஓரடையம் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்.

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞

வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.Star Anand ram

பணவளக்கலை

Akshyum Divine Center

🕉🕉www.drstaranandram.com

#staranand#GuberaGuruji#amavasi#parikaram#mantra#chanting#temple#divine

Back to blog