பங்குனி உத்திரம்

நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும் பங்குனி உத்திரம்

நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும் பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த Read more…

மீனாட்சியம்மன் பாமாலை

மீனாட்சியம்மன் பாமாலை.

மதுரைக்கு அரசி முத்தமிழ் சங்கம் கண்டமதுரை சொக்கநாதன் எழிலரசி மீனாட்சி அம்மன் திருவடிகளை தொழுது மகிழ்வோம்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!

அங்கோர் வாட் (Angkor Wat) – உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்

அங்கோர் வாட் (Angkor Wat) கம்போடியா

இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின்[2] போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு

ஏன் ஸத்ய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

மற்ற யுகத்தில் அதாவது முந்தைய ஸத்ய த்ரேதா துவாபர யுகத்தில் கஷ்டப்பட்டு விரதமிருந்து பல ஆண்டுகள் நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் பரமாத்மா தோன்றுவார்.

ஆனால் கலியுகத்தில் அப்படி அல்ல.

நாம ஸ்மரணை நாம ஜெபம் ஒன்றே பகவானுக்கு பரம ப்ரீதியை தரும்.

அதுமட்டுமல்ல பொய் பித்தலாட்டம் நயவஞ்சகம் அதிகமாக இருக்கும் கலியுகத்தில் இந்த ஸத்ய நாராயண பூஜை ஒன்றே சகல செளபாக்யத்தையும் தர வல்லது.

பகவானை கெட்டியாக பிடித்து கொண்டால் அவரும் நம்மை கெட்டியாக பிடித்துக் கொள்வார்.

ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த முறை குரு வாரம் அதுவும் திருவோண நட்சத்திரத்தில் வருவது அதி அற்புதமான நாள்.

அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?
கலிலீயோதான்.

அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்பே இந்த ஸ்ரீவராக பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே; அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டை என்று தெரியும் ?

அது தான் மெய் ஞானிகள் நமது சித்தர்களின் ஆன்மிக அறிவியல்

அண்டம் பிண்டம் ஓன்றே

ஆடி அமாவாசை சிறப்பு தரிசனம் தக்ஷிண கால பைரவர் தரிசனம் தர்மபுரி

அதியமான் கோட்டை காலபைரவர்…

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒருமுறை அதியமான் மன்னருக்கு அபூர்வமான நெல்லிக் கனி கிடைத்தது. அந்த நெல்லிக் கனியை உண்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது தெரிந்திருந்தும், அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல், தமிழின்பால் கொண்டிருந்த தனிப் பற்றின் காரணமாக, தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை ஔவை பிராட்டிக்கு தந்து மகிழ்ந்தான்.

ஆடி அமாவாசையின் மகத்துவம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள்

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள் :
மந்திரங்கள்

நாம் தெரிந்து கொள்ளப் போவது

27 நக்ஷத்திரங்களின் காயத்ரி :

ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 11 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

எல்லா நாளுமே நல்ல நாள்தான் கோளாறு பதிகம்

எல்லா நாளுமே நல்ல நாள்தான்

கோளாறு பதிகம்

கோள்களின் தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்

நாயன்மார்களில் முக்கிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் கோள்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க கோளறு பதிகம் பாடி அருளியுள்ளார்.

கிரக நிலைகளினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.

கோளறு பதிகம்:
ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.

ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அத்னாஅல் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர்.

பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார்.

பயன்கள்:

கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.

இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
கோளறு பதிகம்
பண் – பியந்தைக்காந்தாரம்

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் செல்வ செழிப்பான வாழ்வை ஏற்படுத்தும் சூச்சம வானியல் அற்புதம் சித்தர்கள் வெளிப்படுத்திய ரகசியம்

கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் – ஜூலை 2 – 12

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும்

கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 – ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது.