திதி நித்ய தேவதைகளின் ரகசியம்
திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.