அங்கோர் வாட் (Angkor Wat) -  உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்

அங்கோர் வாட் (Angkor Wat) - உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்

ஆனந்த வணக்கம்

இரண்டாவது முறையாக உலகின் மிக பெரும் கோவில் உலகின் அதிகமானோர் தரிசித்த கோவில் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்! ஆனந்த தருணங்கள்

அங்கோர் வாட் (Angkor Wat) கம்போடியா

இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

முதலில் இந்த கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுகாக கட்டப்பட்டது. ஆனால் 14-15ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.

இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும்.

அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது.

Back to blog