அந்த வணக்கம் அன்பு நண்பர்களே

பணத்தை பெருக்குவதற்கு பணவளக்கலை பயிற்சியின் மூலம் பல்வேறு விதமான ஆலோசனைகள் கூறி உள்ளோம் ஆனால் இந்த பணத்தை சேமிப்பதற்காக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

நீங்க சேர்க்கக்கூடிய ஒரு சிறு தொகையானது நாளை பெரிய தொகையாக மாறக் கூடிய ஒரு அற்புதமான சூட்சுமமான ரகசியத்தை தான்சொல்லித்தர போகின்றேன்.

21 லட்சத்து 60 ஆயிரத்தை மிக எளிதாக எவ்வாறு சேமிப்பது. உங்கள்வீட்டின் அருகில் அல்லது உங்கள் ஊரின் அருகிலுள்ள தபால் அலுவலகங்களில் மற்றும் வங்கிகளில் ஒரு அற்புதமான ஸ்கீம் உள்ளது. PPF (Public Provident Fund) என்கின்ற ஸ்கீம். இது 100% பாதுகாப்பானது 100% உண்மையானது 0% ரிஸ்க் இல்லை.

PPF Scheme என்னவென்றால் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஒரு லட்சம் வரை நீங்கள் அதில் போடலாம். 15 வருஷம் குறைந்தபட்ச சேமிப்பு ஆண்டு காலமாக இருக்க வேண்டும். இவர்கள் 8% வட்டி விகிதம் தருவார்கள். அதற்கு குறைந்து இருக்காது. இதில் நாம் எவ்வாறு பணத்தை செலுத்துவது என்றால் மாதமாதம் செலுத்தலாம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்அல்லது அரையாண்டு என்கின்ற முறையில் நாம் செலுத்தலாம். மாதம் மாதம் செலுத்தினால் மட்டுமே நமக்கு சேமிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் வரும்.

இதை தொடர்ந்து நீங்கள் மூன்று ஆண்டுகாலம் செய்துவந்தீர்கள் என்றால் இதை வைத்து கூட உங்களால் லோன் வாங்கி கொள்ள முடியும். யார் யார் இதை செய்யலாம் என்றால் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தியர்கள் இதை செய்யலாம். இதற்கு என்ன சான்றிதழ் வழங்க வேண்டும் ID Proof மற்றும் Photo இருந்தால் போதும்.

இந்த இருபத்தி ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரவேண்டும் என்றால் நீங்கள் மாதம் மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்றால் 6 ஆயிரம் ரூபாவை PPF ஆக செலுத்தி வந்தீர்கள் என்றால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாம் செலுத்திய தொகை 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் பதினைந்து வருடம் கழித்து அந்த PPF ல் வரும் தொகையானது 21 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நமக்கு கிடைக்கும். போடக்கூடிய தொகைக்கு இரண்டு மடங்கான லாபம் கிடைத்து தீரும் எந்த ஒரு பயமும் தேவையில்லை முற்றிலும் பாதுகாப்பானது.

இது RBI ஓடபாதுகாப்பான திட்டமாகும்.ஆகையால் பயப்படத் தேவையில்லை நம்முடைய பணம் பத்திரமாகவும் மற்றும் இரண்டு மடங்கு லாபம் ஆகவும் நமக்கு கிடைக்கும். இது நம் ஊரில் உள்ள தபால் அலுவலகத்திலும் உள்ளது மற்றும் வங்கிகளிலும் உள்ளது வங்கியில் உள்ள திட்டம் சார்ந்த ஆவணங்களை தெளிவாக படித்து விட்டு முதலீடு செய்யுங்கள்.

மாதம் மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்பது நமக்கு பெரிய தொகை. ஆனால் EMI மாதிரி கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கட்டினீர்கள் என்றால் இது ஒருமிகப்பெரிய தொகையாக உங்களுக்கு கிடைக்கும்.

சேமிப்பு என்பது குண்டூசியை கிணறு தோண்டுவதற்கு சமம் செலவு என்பதுஅதே குண்டூசிகள் பலூனை உடைப்பதற்கு சமம்.செலவு நினைத்தால் நடக்கும் சேமிப்பு முயற்சி எடுத்தால் மட்டுமே நடக்கும்.ஆகையால் லட்சாதிபதி ஆவதற்கான நான் கொடுத்த இந்த ஆலோசனையை எடுத்துக்கொண்டு லட்சாதிபதி ஆகுங்கள்.

நீங்கள் லட்சாதிபதி ஆகவேண்டும் என்று நானும் மனதார வாழ்த்துகின்றேன்.

வாழ்க பணமுடன்!!!

நன்றிகள் கோடி!!!