இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு
சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு இலுப்பை எண்ணெயில்
சிவப்புத் திரியிட்டு தீபமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
நமது நாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல அற்புதமான மூலிகைகள், செடிகள், மரங்கள் குறித்து சித்தர்கள் தங்கள் எழுதிய சித்த மருத்துவ குறிப்புகளில் கூறியுள்ளனர். “ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை மரத்தின் அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை விதைகளிலிருந்து “இலுப்பை எண்ணெய்” எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
இலுப்பை மரம் ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த மரமாக சித்தர்களால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்களை கொண்ட இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி வீட்டில் மங்களங்கள் பெருகச் செய்கிறது.