எல்லா நாளுமே நல்ல நாள்தான்
கோளாறு பதிகம்
கோள்களின் தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்
நாயன்மார்களில் முக்கிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் கோள்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க கோளறு பதிகம் பாடி அருளியுள்ளார்.
கிரக நிலைகளினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.
கோளறு பதிகம்:
ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.
ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அத்னாஅல் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.
இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர்.
பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார்.
பயன்கள்:
கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.
இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
கோளறு பதிகம்
பண் – பியந்தைக்காந்தாரம்