ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா.

எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது.

அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 நாட்கள், 108 நாட்கள், ஆறு மாதங்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தால் உன் வாழ்வு மாறும். அந்த மந்திரம் என்ன நம் மனதை திறன் படுத்துவதற்காக மந்திரம் நம் மனதை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்காக நம் குறிக்கோளை அடைய செய்வதற்காக, வெற்றியை நோக்கி செல்வதற்கு நம்மை நாமே செயல்படுத்துவதற்கு பெயர்தான் சுய பிரகடனம்.

இந்த சுய பிரகடனத்தை கோடீஸ்வரன் ஆவதற்காக ஒரு வாக்கியத்தை உருவாக்கி அதை நீங்கள் பார்த்தால் கேட்டால் உணர்ந்தாள் அதை நம்பினால் அதற்குரிய முயற்சியும் பயிற்சியும் செய்தால் உங்கள் வாழ்வில் அச்சூழல் நிச்சயமாக உருவாகும். அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன் வார்த்தை தான் வாழ்க்கை என்று.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்முள் பலர் நமக்குள் சக்தி இருப்பதை அடிக்கடி உணருவோம் கண்டிப்பாக நமக்குள் சக்தி என்பது ஒன்று உள்ளது அது உடன் நாம் என்ன சொல்கிறோமோ என்ன கேட்கிறோமோ என்ன உணர்கிறோமோ அதைத்தான் நம்மளை செய்யத் தூண்டுகிறது அந்த சக்தி.

ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே சுயபிரகடனம் திரும்பத் திரும்ப நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால் உங்களால் மனதில் அச்செயல் நன்றாகப் பதியும். ஆழ்மனதில் எது படுகின்றதோ அது நம் வாழ்வில் நன்றாகவே நடக்கும். இந்த சுய பிரகடனத்தை நாம் சத்தமாக ஜெபிக்கும்போது நம் மனதிலும் ஆழ் மனதிலும் பதியும்.

நீங்கள் பண ரீதியாக வெற்றி அடைய வேண்டுமென்றால் நான் சொல்லித் தரும் ஒரு மந்திரத்தை நீங்கள் அனுதினமும் உங்கள் நாவால் கூறிக் கொண்டே இருந்தால் பணம் ரீதியான வெற்றியை உங்களால் எளிதில் எட்ட முடியும். அது என்ன மந்திரம் என்றால் ‘நான் கோடீஸ்வரன்’ இந்த மந்திரத்தை அனுதினமும் உங்கள் நாவால் கூறிக் கொண்டே இருங்கள்.

அப்போதுதான் உங்களுக்குள் உள்ள சக்தி உங்களை தூண்டும். நான் கோடீஸ்வரன் அத்துடன் நான் லட்சாதிபதி என்ற வார்த்தைகளில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருந்தாள் நீங்க நினைத்தது போல் உங்கள் வாழ்க்கை மாறும். நம்முடைய பையில் பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை நாளை சாப்பிடுவதற்கு உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த மந்திரத்தை மட்டும் விடாமல் கூறிக்கொண்டே இருங்கள்.

இப்படிக் கூறிக் கொண்டே இருந்தாள் நமக்குள் பல சிந்தனைகள் உண்டாகும். அச் சிந்தனைகள் நம்மை பல செயல்களை செய்ய தூண்டும். அந்த செயல்களை செய்யத் தூண்டும் அந்த முயற்சியே நம் வெற்றியின் முதல் படி ஆகும். ஆதலால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே அனுதினமும் நீங்கள் சுய பிரகடனத்தை பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் நிச்சயமாக மாறும்.

வாழ்க பணமுடன்! நன்றி வணக்கம்!