அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

தாய்மார்கள் மற்றும் சகோதரி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை நன்றாக கழுவி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு நேரத்தில் சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கின்றது. மகாலட்சுமி வந்து பார்க்கும்போது உங்கள் சமையலறையை சுத்தமாக அலங்கோலமாக இருந்தால் அது போலத்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை இரவு சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு தூங்கச் செல்லுங்கள்.

அதற்கு பின் காலை எழுந்தவுடன் பொதுவாக பெண் மார்கள் சமையலறைக்கு செல்வதற்கு முன் குளித்து விட்டுத்தான் செல்வார்கள். ஆனால் காலப்போக்கில் அதை நாம் மறந்து விட்டு காலை எழுந்தவுடன் அப்படியே சமையலறைக்கு சென்று விடுகின்றோம் அவ்வாறு செய்யாமல் முகம் கழுவிட்டு பல்துலக்கி விட்டு முடிந்தால் குளித்து விட்டு சென்றால் இன்னும் நல்லது. அதற்குப் பின் அடுப்பு பற்ற வைக்கும் முன் முதலில் கற்பூரம் பற்ற வைத்து வணங்கி விட்டு சமையலை தொடங்குங்கள்.

இதற்காக தூய்மையாக சமைக்க சொல்கின்றேன் என்றால் நீங்கள் என்ன சமைத்து கொடுக்கிறீர்களோ என்ன உணவை கொடுக்கிறீர்களோ அது தான் மற்றவர்களுக்கு உணர்வாக மாறுகிறது. நீங்கள் கோபத்தோடு உணவை சமைத்து கொடுத்தீர்கள் என்றால் அவர்களுக்கு எதிர்மறை விஷயங்கள், பிரச்சனைகள் தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவே அன்பாக நீங்கள் சமைத்து அன்பை வெளிப்படுத்தினீர்களா அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வெற்றிகள் கைகூடும்.

ஆகையால் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் வீட்டில் கழிவுகளை தங்க விடாதீர்கள். சுத்தம் செய்துகொண்டு இருங்கள் அப்போதுதான் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நேர்மறையான எண்ணங்களும் பெருகும் கழிவுகள் இருந்தால் அந்த கழிவுகளை நமக்கு எதிர்மறையான விஷயங்களையும் செயல்களையும் ஏற்படுத்தும்.

எனவே இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை சுத்தப்படுத்தி விட்டு பகலில் எழுந்து கற்பூரம் ஏற்றி அந்த கற்பூரம் அமைந்த பிறகு உங்கள் வேலையை செய்து வந்தீர்கள் என்றால் செல்வ வளம் பெருகும். இதை நாம் சமையல் மந்திரம் என்றும் கூட கூறலாம்.

இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் நினைப்பது நடந்தே தீரும்

நன்றிகள் கோடி!

வாழ்க! பணமுடன்!