எல்லாமாகி நின்றாய் நீயே

தாயும் நீயே தந்தையும் நீயே
அறிவும் நீயே ஆற்றலும் நீயே
அன்னமும் நீயே ஆனந்தமும் நீயே
ஆற்றலும் நீயே அழிப்பவனும் நீயே
இருப்பவனும் நீயே இல்லாதவனும் நீயே
கொடுப்பவனும் நீயே எடுப்பவனும் நீயே
எல்லாம் நீயே எதிலும் நீயே
ஏற்றமும் நீயே மாற்றமும் நீயே
ஏக்கமும் நீயே ஊக்கமும் நீயே
எதிலும் நீயே இதிலும் நீயே
அருளும் நீயே பொருளும் நீயே
ஏகமும் நீயே அனேகமும் நீயே
அருவமும் நீயே உருவமும் நீயே
அகமும் நீயே புறமும் நீயே
புத்தியும் நீயே சக்தியும் நீயே
குகனும் நீயே குபேரனும் நீயே
வேலும் நீயே சூலமும் நீயே
விதையும் நீயே கனியும் நீயே
சக்தியும் நீயே சிவனும் நீயே
சகலமும் நீயே சகலமும் நீயே
குருவே நீயே குருவே நீயே
குருவே குருவே குருவே குருவே
சரணம் சரணம் சரணம் சரணம்
குருவே சரணம் குருவே துணை