மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்
உயி ரொழிய முனிவு கூர்ந்த
பூவையுருள் திருமேனி அருட்கடவுள்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
புறத்தினிது சேர்ந்து வைக்கும்
பாவை ஈடு தாள் தொழுது பழைய தேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்

கொழுதியிசை அலி முரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கை போல
மலையுறலும் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனி தின்ற அருட் கொம்பே
கரகமலம் முகில்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினைதீர
அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய்

கமலை திரு மறு மார்பன் மனை கிழித்தி
செலும் கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
தனை யீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள்
அவதரித் தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

மலர்க்கமல நறும் பொகுட்டில் அரிசிருக்கும்
செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படை தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
மதி புனைந்த பரமன் தானும்
துடைத்தனர் நின் பெரும் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல் நெடும் புவியனைத்தும் பொது நீக்கித்
தனிப் புறக்குமன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சியோரும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில்
வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்
பொகுட்டுறையும் அணியிழை நின்
அருள் நோக்கம் அடைந்து ளாரே

செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரறும்
எழில் மேனி திருவே வேலை
அங்கன் உள்ள கிருள் துலக்கும் அலர்கதிர்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங் கானில் நெருப்பில் மண்ணில்
எங்குனை நீ, அவணன்றோ மல்லல் வளம்
சிறந்தோங்கி இடும்ப தம்மா

பலன்:

என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெருகும் போகம் நுகர்ந்திடவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல் மனை அகத்திருப்பின் வருமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யான்